Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையகத்திற்கான 10,000 வீட்டு திட்டம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை

மலையகத்திற்கான 10,000 வீட்டு திட்டம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.

ThanaBy ThanaOctober 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்   எஸ்.ஜெய்சங்கர், இன்று (11) முக்கிய சந்திப்புகளில் ஈடுப்பட்டதுடன், ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆரம்பமாகவே 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்பில் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியா சார்பில் கையொப்பமிட்டார்.

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பதுளை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலேயே மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்திய அரசால் மலையகத்தில் ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரத பிரதமர் மோடி, மலையகம் வந்திருந்தவேளை 10 ஆயிரம் வீடுகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.

முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபா உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு 28 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.