மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.12.10.2023.
இன்று மாலை 3.45 மணிக்கு ஹப்புகஸ்தனை பகுதியில் அமைந்துள்ள கென்யோன் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் 3 அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது என கென்யோன் நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த சில நாட்களாக இப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் முடிந்த அளவு நீர் மின் உற்பத்தியை மேற் கொண்ட பின்னர் சுரங்க பாதைகள் வழியாக நீரை லக்சபான நீர் மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று மாலை வேளையில் அதிக மழை பெய்து வருவதால் அதிகளவில் நீர் வரத்து உள்ளது.
மேலதிக நீரையே வெளியேற்றி வருவதாகவும் கரையோர பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

