ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முறைபப்பாடு அளிக்க வந்த 18 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸ் நிலைய வளாகத்தில் தனக்கு தானே தீ வைத்து கொண்டதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த பெண் பேத்தியகொட கெலி ஓயா பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது
தீ பற்றி எரிவதை கண்ட பொலிஸார் உடன் தீயை அணைத்து 1990 காவு வண்டி மூலம் தியத்தலாவ வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
