தலவாக்கலை நகரிலிருந்து கொட்டகலை த.ம.வி , கேம்பிரிட்ஜ் கல்லூரி , ஹைலண்ல் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு செல்லும் பாடசாலை மாணவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளிலே மாதாந்த பருவ சீட்டுகளை பயன்படுத்தி செல்லுகின்றனர்.
தலவாக்கலை நகரில் 7.10 பேருந்து (நுவரெலியா-ஹற்றன்) தினமும் இருப்பதில்லை.
அத்துடன் 7.20 (டயகம – ஹற்றன்) semi luxury நேரத்திற்கு இருந்தாலும் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதில்லை.
7.40 (டயகம – கொழும்பு) தினமும் சேவையில் இருந்தாலும் நடத்துனர் பாடசாலை மாணவர்களுக்கான தகுந்த மரியாதையினை வழங்குவதில்லை இதனால் பாடசாலை மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு தகுந்த நேரத்திற்கு செல்ல முடியாததால் கல்வி கற்பதில் சிரமம் கொள்கின்றனர்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு மாணவர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தருமாறு வேண்டப்படுகின்றனர்.

