லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் 19 ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள 3 வியாபார நிலையங்களை நேற்று இரவு திருடர்கள் உடைத்து சில பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக திருடர்களை கைது செய்வதற்கான தடயவியல் பரிசோதனைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேக நபர்களை கைது செய்யும் முகமாக மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

