நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகத்தில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேலும் குறிப்பிடுகின்றார்.
இதற்கமைய கொஸ்லந்த மீரியபெத்தவில் வசிக்கும் 134 குடும்பங்களும், மஹகந்த பிரிவில் 23 குடும்பங்களும், மேல் மகல்தெனிய பிரதேசத்தில் 84 குடும்பங்களும், மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொஸ்லாந்தையில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

