மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.22.10.2023.
இன்று காலை 9 மணி முதல் கென்யோன் நீர் மின் நிலைய ஊழியர்களை கொண்டு நீர் தேக்க பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி மேற் கொண்டு உள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்து வந்து கனத்த மழை காரணமாக வன பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களினால் வீசப்படும் குப்பைகளையும் அகற்றும் பணியில் இன்று கென்யோன் நீர் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர் தேக்க நீரை வெளியேற்றிய பின்னர் நீர் தேக்க உட் பகுதியில் இருந்த சகல விதமான குப்பைகளையும் அகற்றப்பட்டு மீண்டும் நீர் நிரப்பும் பணியை ஆரம்பித்துள்ளனர் நீர் மின் நிலைய ஊழியர்கள்.

