ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாலிஎல பதுளை புகையிரத பாதையில் ஹப்புவத்தை பகுதியில் 80 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதுண்டு பலத்த காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதம் தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை 4. மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த பெண்மணி ஹப்புவத்தை பதுளை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ராமு தனராஜா)
