வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
கொலன்ன, மொரவாடிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 17 வயதுடைய மாணவனே உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொலன்னாவை பிரதேச செயலகத்தில் வசிப்பவர்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுவிக்கப்பட்ட இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் 3.00 மணி வரை அமுலில் இருக்கும்.
