மலையகத்தில் பல்வேறு இடங்களில் 21 இந்து கோவில்களை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த 21 இந்து ஆலயங்களில் கொள்ளையடித்த நபர் மற்றும் அவருக்கு நகைகளை விற்பனை செய்ய உதவிய இருவரையும் கைது செய்துள்ளதோடு இன்றைய தினம்(23) நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
