ஹக்கலை ஶ்ரீ கணபதி இந்து கல்லூரியின் நுழைவாயில் கலாகம பிரதான வீதியுடனான பகுதி நேற்று 24.10.2023 பெய்த கடும் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பாடசாலை செல்லும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் சிறமத்திற்கு மத்தியில் பாடசாலை சென்றதோடு மண்சரிவினால் பாடசாலையின் பிரதான பாதை முற்று முழுதுமாக மூடிய நிலையில் இதனை உயர்தர மாணவர்கள் பாதையை சீர்செய்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் வெலிமடை பிரதேச சபைக்கும் பலமுறை அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்.
ஹக்கலை லோகுராமர்

