மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை கவரவில 320/C கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆறு தோட்டங்களை சேர்ந்த மக்கள் சமுர்த்தி நிவாரணத்தை பெற்று கொள்வதில் புறக்கணிக்க பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரிவில் கவரவில ,பாக்றோ, சின்ன சோளங்கந்த,. பெரிய சோளங்கந்த, மல்லியப்பு, டீசைட் ஆகிய தோட்ட மக்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
தமக்கான சமுர்த்தி நிவாரணம் சம்பந்தமாக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இது வரை தமக்கான உரிய தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் என்ன தான் நடைமுறை படுத்தினாலும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சமூர்த்தி வங்கி மற்றும் உத்தியோகத்தர்கள் அதேபோல் நோர்வூட் சமூர்த்தி வங்கி மற்றும் அங்கு உள்ள உத்தியோகத்தர்கள் சமூர்த்தி நிவாரணம் வழங்கும் பணியில் பாகுபாடு செய்வதில் முன்னிலையில் உள்ளனர்.
மேலும் சமுர்த்தி அதிகாரிகளின் தரகர்களாக செயல்படுபவர்களின் சிபாரிசுகளுக்கு அமையவே குறித்த நிவாரணம் வழங்கப்படுவதாகவும் செல்வந்தர்கள் மற்றும் தரகர்களின் உறவினர்கள் ஆகியோருக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுவதாகவும் வறிய குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு எட்டா கனியாக உள்ள தாகவும் இது குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த முன் வர வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுரேஷ்
