தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக
பலாங்கொடை ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு காவற்துறையினர் விஷேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
இரத்தினபுரி பலாங்கொடை
பலாங்கொடை ஹட்டன்
பலாங்கொடை பதுளை
பலாங்கொடை வெள்ளவாய
பலாங்கொடை வேவல்வத்த
பலாங்கொடை கல்தொட்ட
வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதோடு வீதிகளில் மண் மேடுகள் மரங்கள் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதோடு அதிக மழை பெய்வதால் வீதிகளில் வழுக்கும் தன்மை அதிகரித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு காவற்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
