மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.27.10.2023.
நேற்றைய தினம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகல ஓயாவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நேற்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவ்வாறு ஆஜர் படுத்த பட்ட எட்டு பேருக்கு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி எச், எம், பரீட் டீன் அவர்கள் தலா 12500/= ரூபாய் வீதம் 100000/= அபராதம் விதிக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த நால்வர் மற்றும் நோட்டன் பகுதியில் உள்ள தெபட்டன் தோட்டத்தை சேர்ந்த நால்வர் ஆவர்.
சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த போது மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார விற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பொலிசார் அப் பகுதியை சுற்றி வளைத்து அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேரையும் உபகரணங்களையும் கைப்பற்றி சந்தேக நபர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது ஒரு லட்சம் ரூபாய் தண்ட பணம் அறவிடபட்டமை குறிப்பிடத்தக்கது.
