மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.01.11.2023.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் நீர் தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கென்யோன் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் வழியாக 3 அங்குலம் நீர் வெளியேற்றம் செய்ய பட்டு தற்போது மூடப்பட்டது.
இப் பகுதியில் கன பெய்யும் பட்சத்தில் நீர் வரத்து அதிகரிக்கும் போது வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம் செய்ய படலாம் ஆகையால் தாழ் நிலப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
