Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை

August 6, 2026

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 18 வயது மாணவியின் துணிச்சலான செயலால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
மலையகம்

18 வயது மாணவியின் துணிச்சலான செயலால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

ThanaBy ThanaNovember 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெள்ளவாய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்திய போது ஹிங்குறுகடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவாய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று மாலை 6.00 மணியளவில் வெள்ளவாயவில் இருந்து சியம்பலா குண வீதியின் ஊடாக ஹிங்குறுகடுவ நோக்கி வந்து கொண்டிருந்த போது பேருந்து அதி வேகமாக வந்து கொண்டிருந்ததாகவும் சுமார் இரண்டு இடங்களில் விபத்து ஏற்பட இருந்ததாகவும் அமுனாண்ட ஆர பகுதியில் கல்லொன்றில் பின் டயர் மோதியதில் டயர் ஒன்று வெடித்ததாகவும் இதன் போது பேருந்தினுள் பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவரும் 14 வயதுடைய பெண் பிள்ளை ஒன்றும் காயமடைந்து ஹிங்குறுகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குறுகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பேருந்தினுள் இருந்த 18 வயதுடைய மாணவி ஒருவர் சாரதியிடம் சென்று பேருந்தை மீண்டும் செலுத்த வேண்டாம் என்றும் நீங்கள் மது போதையில் இருக்கின்றீர்கள் என்று கூக்குரல் இட்டு சத்தம் போட்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி பேருந்துக்கு முன் நின்று தான் பேருந்தை செலுத்த விட மாட்டேன் என்றும் கூக்குரல் இட்ட போது அவ்விடத்தில் பொது மக்களும் ஒன்று கூடினர்.குறித்த மாணவி ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கையடக்க தொலைபேசியின் மூலம் அறிவித்துள்ளார்.

இதன்போது ஸ்தானத்திற்கு விரைந்த ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டார சாரதியை கைது செய்து பரிசோதனைக்கு உட்படுத்திய போது சாரதி மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதன்போது 44 வயதுடைய கரம்பிடிய ஹிங்குறுகடுவ பகுதியை சேர்ந்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டார தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026
    Editors Picks

    வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.