ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், விஷ்ணு ஆரோஹணம் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் அவர்களால் சத்துணவு போஷாக்கு வேலைத்திட்டத்தின் கீழ் கினிகத்தேன களுகல பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளர்கள் மற்றும் கினிக்கத்தேன பிரதேச சபை உறுப்பினர் J.T. ஈபர்ட் பெரேரா உட்பட பலரும், பிரதேச மக்களும் கலந்துக்கொண்டனர். நிகழ்வில் மக்களின் குறைநிறைகள் பற்றியும் கேட்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சரத்