மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் கிளை காரியாலயத்தில் மஹஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் உள்ள 3000 தொடக்கம் 5000 பேருக்கு ஒரு கிராம சேவை அதிகாரி ஒருவரே காணப்படுகின்றார்.
ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 10150 குடும்பங்களுக்கு, தலா ஒரு கிராமசேவகர் மாத்திரமே உள்ளனர். இதனை கருத்திற்கொண்டு உடன் தீர்வினை எம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் கிளை காரியாலயத்தில் மஹஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

