மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.10.11.2023.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஹட்டன் நகரில் உள்ள பிரதான சந்தியில் இருந்து மஸ்கெலியா நோக்கி வரும் எம், ஆர் நகரில் வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கடந்த சில ஆண்டுகளாக ஹட்டன் நகரில் உள்ள அனைத்து வடிகால்களும் முறையாக செப்பனிட படாமையால் இந்த அனர்த்தம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது.
இது குறித்து ஹட்டன் நகர சபை முன் வந்து, நகரில் உள்ள அனைத்து வடிகால்களும் ஆழப்படுத்தியும் அகலபடுத்தியும், நகரில் முறையான வடிகால் வசதி செய்து கொடுக்க முன் வர வேண்டும் என பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் நகர் வர்த்தகர்கள் பயணிகள் என பலரும் கோரிக்கை முன் வைக்கின்றனர்.







