கந்தலோயா பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு நுழையும் மூன்று பல்கலைக்கழக மாணவிகள்.
பெயர் – பாலகிருஷ்ணன் தர்ஷிகா
பல்கலைக்கழகம் – ஊவா வெல்லஸ்ஸ
பீடம் – முகாமைத்துவம்
கற்கைநெறி – மனிதவள மேம்பாடு(HRD)
பெறுபேறு – A, 2B
வெட்டுபுள்ளி -1.6711
பெயர் – பரமநாதன் துஷாந்தி
பல்கலைக்கழகம் – ஊவா வெல்லஸ்ஸ
பீடம் – முகாமைத்துவம்
கற்கைநெறி- மனிதவள மேம்பாடு(HRD)
பெறுபேறு – 2A,B
வெட்டுபுள்ளி – 1.6495
பெயர் – கிருஷ்ணமூர்த்தி மேனகா பிரியதர்ஷினி.
பல்கலைக்கழகம்- ஊவா வெல்லஸ்ஸ
பீடம் -முகாமைத்துவம்
கற்கை நெறி- மனிதவள மேம்பாடு
பெறுபேறு- 2A,B
வெட்டுபுள்ளி -1.7856
இவர்கள் மூவரும் உயர்தர பரீட்சை எழுதியதிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் வரை கந்தலோயா பாடசாலை செயற்பாட்டுடன் இணைந்து செயற்பட்டவரகள் ஆவர்.
காலையிலிருந்து மாலை வரை மாணவர்களுக்கு கற்பித்து கொடுத்தார்கள். தங்களின் பெறுமதி மிக்க காலங்களை கந்தலோயா பாடசாலைக்கு சேவை செய்வதன் மூலமே கழித்தார்கள்.
இவர்கள் மூன்று பேருமே பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் கற்பதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர்.
பாடசாலையில் நடைபெற்ற சகல விடயங்களிலும் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
இவர்களது பெற்றோர்கள் கூலித்தொழிலாளிகளாவர்.
இவர்கள் தரம் ஒன்று தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு சிறப்பாக தனது கற்பித்தலை மேற்கொண்டவர்கள் ஆவர்.
மாணவி K.மேனகா பிரியதர்ஷினி உயர்தர மாணவர்களுக்கு அரசறிவியல் பாடத்தை கற்பித்ததோடு அது தொடர்பான குறுவினாக்களையும் மாணவர்கள் செய்வதற்கு வழிப்படுத்தியவராவார்.
மாணவி B.தர்ஷிகா அவர்கள் உயர்தர மாணவர்களுக்கு புவியியல் பாடத்தை கற்பித்ததோடு அது தொடர்பான வினாக்களுக்கான விடைகளை திருத்திக் கொடுத்து மாணவர்களை வழிப்படுத்தியவராவர்.
மாணவி P.துசாந்தி அவர்கள் உயர்தர மாணவர்களுக்கு தொடர்பாடலும் ஊடகவியல் கற்கையும் (Communication and Media Studies) பாடத்தை கற்பித்து அது தொடர்பான வினாக்களுக்கான விடைகளையும் திருத்திக் கொடுத்து மாணவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்தியவர் ஆவார்.
இவர்கள் மலையக சமூகம் தொடர்பான சிந்தனை கொண்டவர்கள் ஆவர்.
இவர்கள் உயர்தரம் பரீட்சை எழுதியதிலிருந்து இன்றுவரை ஒரு தொழிலில் ஈடுபட்டிருந்தால் இன்று ஒரு தொகை பணத்துடன் இருந்திருப்பார்கள்.
கந்தலோயா பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையை நன்கு உணர்ந்த இவர்கள் பொருளாதார ரீதியிலான தெரிவுக்கும் அப்பால் சேவை மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இவர்களுக்கு உயர்தரத்தில் எவ்வாறு கந்தலோயா பல்கலைக்கழக மாணவர்கள் கற்பித்து இவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முற்பட்டார்களோ, அதேபோல் இவர்களும் தனது தம்பி தங்கைகளுக்கு கற்பித்துக் கொடுத்தார்கள்.
இவ்வாறு சிந்திப்பது எல்லோராலும் முடியாத காரியம் ஆகும்.
பல்கலைக்கழகத்தில் பயின்று நாட்டுக்கும் பல்கலைக்கழக சமுதாயத்திற்கும் நற்பிரஜைகளாக வருவதற்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
M. Karunakaran
Principal
Kg/Dehi/Kandaloya T.M.V
Nawalapitiya
Sri Lanka
13.11.2023
Contact Details :



