பதுளையில் இருந்து மடுல்சிமை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பசறை சம்பத் வங்கிக்கு முன்பாக திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கர வண்டி பதுளையில் இருந்து மடுல்சிமை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் பசறை சம்பத் வங்கிக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் அவசர தேவை காரணமாக இறங்கி சென்றுள்ளனர்.பின்னர் மீண்டும் முச்சக்கர வண்டியை இயக்கும் போது முச்சக்கர வண்டியில் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்ததாகவும் எவருக்கும் எதுவித சேதமும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத போதிலும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
