பலாங்கொடை மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொதுமக்கள் இணைந்து காலை முதல் தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர்.
பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போன நால்வரின் சடலங்கள் இன்று மாலை மீட்கப்பட்டன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை,45 வயது தாய் 40வயது
மகள் 9 வயது மகள் 14வயது ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட தந்தை, தாய் உட்பட இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் பலாங்கொடை ஆதர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
