மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.15.11.2023.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சம் எழும்புக்கூடு கிடப்பதை கண்ட அப்பிரிவில் உள்ள மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பிரிவில் உள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அதே தோட்டத்தை சேர்ந்த கிட்னசாமி கிருஷ்ணசாமி 70 வயது உடைய நபர் காணாமல் போய் உள்ள நபர் உடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என கூறினார்கள்.
இது குறித்து அந்த தோட்ட நிர்வாகம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு அறிவித்து உள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள்ளனர்.
அப்பகுதிக்கு பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் பார்வை இட்ட பின்னர் எழும்புகள் டி.என்.ஏ.பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லவுள்ளது.
ஹட்டன் தடையவியல் பொலிசார் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உள்ளனர்.
