Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெருந்தோட்ட மக்களுக்காக ”அதி சக்தி” எனும் கோதுமை மா அறிமுக நிகழ்வு
மலையகம்

பெருந்தோட்ட மக்களுக்காக ”அதி சக்தி” எனும் கோதுமை மா அறிமுக நிகழ்வு

ThanaBy ThanaNovember 16, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

க.கிஷாந்தன்)

ஜனாதிபதி சமர்பித்த வரவு செலவு திட்டத்திற்கு அமைய இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் மலையக மக்களின் பல நாள் எதிர்பார்ப்பாக இருக்கும் காணி உரிமைக்கும் மேலும் உட்கட்டமைப்புக்கும், வீடுகள் அமைப்புக்கும் பல பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை எம் மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவின் ஆய்வு அறிக்கையின் படி நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேட்டின் பின்னர் பெருந்தோட்ட மக்களிடையே உணவு பாதுகாப்பு மற்றும் போசனை மட்டத்தின் சரிவு அதிகரித்துள்ளது. இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல மாற்று திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அந்தவகையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவிற்கமைய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் செரண்டிப் கோதுமை மா உற்பத்தி நிறுவனம் ஆகியன இரண்டும் இணைந்து சத்துட்டப்பட்ட கோதுமை மா அறிமுக விழா நேற்று (15.11.2023) நுவரெலியாவில் இடம்பெற்றது.

இந்த கோதுமை மா பைபர் சத்து, இரும்பு சத்து, போலிக்கமிலம் மற்றும் விட்டமின் பீ12 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய விசேட கோதுமை மா ஆகும்.

இது சந்தையில் உள்ள சாதாரண கோதுமை மாவை விட விலை மலிவாக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக மாத்திரம் விற்கப்படும்.

பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் இடையே போசனை குறைப்பாடும் விசேடமாக எனிமிக் எனும் நோயும் காணப்படுகின்றது. இதற்கு தீர்வு ஒன்று வழங்கும் முகமாகவே முதற்கட்டமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சர்மா, பெருந்தோட்ட யாக்கங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட அதன் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

பாரத் அருள்சாமி இதன்போது மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலுக்கமைவாக வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மேலதிகமாக கொள்கை ரீதியான மாற்றங்கள் தர்சார்பு பொருளாதார அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார அபிவிருத்தி போன்றவற்றில் பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் எமது தலைமையில் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்டமாகவே இந்த அதி சக்தி கோதுமை மா அறிமுகமாகும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற புரட்சிகரமான திட்டங்களை நாம் அறிமுகப்படுத்தவும் உள்ளோம்.

இக்குறுகிய காலத்தில் எம் மக்களின் போசனை மட்டத்தை கருத்திற் கொண்டு அதி சக்தி எனும் கோதுமை மாவை உற்பத்தி செய்த செரண்டிப் நிறுவனத்திற்கு எம்மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.