25 வருட சாதனையை முறியடித்த மாணவி
நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமை பரீட்சையில் பலாங்கொடை பெட்டிகள தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த (சுரேஷ் சுதர்சனி) என்ற மாணவி 144 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளார்.
25 வருடங்களுக்கு பிறகு இந்த பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரீட்சையில் சித்தி அடைந்த மாணவி என்ற பெருமை இவருக்கே சாரும்.
இவர் பலாங்கொடை பெட்டிகள பிரதேசத்தைச் சேர்ந்த. சுப்பிரமணியம் சுரேஷ், சுப்பையா செல்வராணி ஆகியோரின் புதல்வியாவார்.
பெட்டிகள தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்.S.M.இல்யாஸ்
வகுப்பாசிரியர் . திருமதி.T.கலைமதி மற்றும் ஆசிரிய குழாமுக்கும் வாழ்த்துக்களை பிரதேச மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.

