வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டை, சித்தன்கேணி அருள்மிகு சிவன் திருக்கோயில்
சித்தமெல்லாம் நிறைந்து சீர்வாழ்வைத் தந்தருளும் சிவனே
சிந்தனையை நேர்ப்படுத்தி செயற்படவே அருள்வாய்
சாந்தமனம் கொண்டவராய் நாமென்றும் திகழ
அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே
உயிருனுள் உயிராக உறைந்திருக்கும் சிவனே
உணர்வுகளை வழிப்படுத்தி செயற்படவே அருள்வாய்
அன்பு மனம் கொண்டவராய் நாமென்றும் திகழ
அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே
அண்டத்தையே அசைத்தாட்டும் ஆண்டவனே சிவனே
அச்சமின்றி வாழும் நிலை செயற்படவே அருள்வாய்
அமைதி மனம் கொண்டவராய் நாமென்றும் திகழ
அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே
வேதத்தின் மூலவராய் விளக்குகின்ற சிவனே
வெறுப்பு இன்றி வாழும் நிலை பெற்றிடவே அருள்வாய்
நல்ல மனம் கொண்டவராய் நாமென்றும் திகழ
அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே
தென்திசையில் வீற்றிருந்துலகை ஆளுகின்ற சிவனே
தெளிவான மனநிலையைப் பெற்றிடவே அருள்வாய்
நேர்மை மனம் கொண்டவராய் நாமென்றும் திகழ
அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே
அருவுருவாய் ரூபமாய் அதற்கப்புறத்தாகி நிற்கும் சிவனே
எழுச்சிமிகு வாழ்வினையே பெற்றிடவே அருள்வாய்
புத்துணர்வு கொண்டவராய் நாமென்றும் திகழ
அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.