மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.சொ.தி.பொருமாள் 29.11.2023.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களின் ஒருவரும் மலையக அரசியல் தொழிற்சங்க இலக்கிய ஆளுமைகளின் ஒருவருமான அமரர்.சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் 39ஆவது நினைவு தினம் 19 ஆம் திகதி இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 19 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் வட்டகொடை மடக்கும்புர தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து மடக்கும்புர தோட்டத்தில் அமைந்துள்ள அமரர் சி .வி வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தூபிக்கு அருகில் நினைவஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கேற்ப
ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.



