இன்று பெய்த கடும் மழையின் காரணமாக பதுளை மட்டக்களப்பு வீதியில் பிபிலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 32வது கட்டை பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீதியில் விழுந்தமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் மண்ணை அப்புறப்படுத்தி வீதியை சீரமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.




