Lanka help foundation நிறுவனத்தின் அனுசரனையில் ஹல்தும்முல்லை , ப/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா, கடந்த 2022,12,20 ம் திகதி அதிபர் K சுந்தரராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் Lanka Help Foundation முகாமையாளர் R. ராஜதுரை அவர்கள், மாகாண கல்வி செயலாளர், வலய கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர், இ. வ. அ அமைப்பு உறுப்பினர்கள்,வர்த்தகர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தனது சேவைக் காலத்தில் மாணவர் கல்வி நலன் கருதி இவ்வாறான உதவி செய்த lhf நிறுவனத்துக்கு நன்றி கூறுவதோடு, இவ்வாறான செயற்பாடுகள் மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அங்கு உரையாற்றிய அதிபர் K. சுந்தரராஜ் தெரிவித்தார்.
