பலாங்கொடை ராசகலை – எல்லவத்த பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீட்டில் வசித்து வந்த 8 பேர் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பலாங்கொடை – மாரத்தென்ன தெதனகலை தோட்ட மேற்பிரிவில் நிலம் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்து பாதுகாப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர், மீண்டும் அந்த தோட்ட பகுதியில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக அதிகாரிகள் முன்னெடுத்த ஆய்வின் பின்னர், அவர்கள் மீள குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தமது குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் அச்சம் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
