கண்டி – பேராதனை நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மண்சரிவு நேற்றிரவு 11.30 அளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவினால் நான்கு வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையத்திலிருந்த 68 வயதாக வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மற்றும் இடர் முகாமைத்து நிலையத்தின் அதிகாரிகள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் இதற்கு முன்பும் மண்சரிவு ஏற்பட்டிருந்தமையினால், குறித்த வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், குறித்த வர்த்தர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறாமையே இவர் உயிரிழந்தமைக்கான காரணம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறித்த பகுதியில் அபாயகரமான நிலைமையிலுள்ள ஏனைய கட்டிடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

