மனித அபிவிருத்தி தாபனம் பெண்கள் உரிமைகளை மையப்படுத்தி பல செயற்பாடுகளை செய்து வருகின்றது. அதனடிப்படையில் பிரான்ஸ் எம்பசியின் நிதியுதவியுடன் FPA நிறுவனத்தின் ஊடாக மனித அபிவிருத்தி தாபனம் பெண்களின் சுகாதாரம் தொடர்பாக 5000 பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு (குறிப்பாக மாதவிடாய் சுகாதாரம்) அந்நேரத்திலான பாதுகாப்பு மற்றும் உள, நல மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை மலையக பிரதேசங்களை இலக்காக கொண்டு ஆரம்பித்துள்ளது.
அதில் இரண்டாம் கட்ட செயற்பாடு பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலை மாணவர்களுக்கு இன்று நாடாத்தப்பட்டது. இதில் வளவாளர்களாக கொட்டகலை சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.



