Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை
மலையகம்

கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை

ThanaBy ThanaNovember 26, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (23) நடைபெற்ற வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் குறிப்பிடுகையில், நாட்டின் பிரதான மற்றும் பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் கையிருப்புகளை வெளியிடாமல் செயற்கையாகப் பதுக்கி கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிகளுக்குத் தட்டுப்பாட்டு நிலைமையைத் தோற்றுவித்திருப்பதாகவும், இந்த நிலைமையைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வர்த்தக சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் முறைமையொன்று வடிவமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சீனிக்கான அதியுச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருந்தொகையான சீனி இருப்புக்கள் பதுக்கப்பட்டிருப்பதாலும், இறக்குமதியாளர்கள் சீனி இறக்குமதியை இடைநிறுத்தியிருப்பதாலும் உள்ளூர் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாகக் கூறப்படுகிறது என்ற விடயத்தையும் அமைச்சர் தெரிவித்தார். சீனிக்கான இருப்பில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சீனிக்கான அதியுச்ச சில்லறை விலையை நீக்குவது குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறினார்.

அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்குவதில் லங்கா சதோச வெற்றிபெற்றிருப்பதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக 400 பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் நிறுவுனர் அமரர் கௌரவ லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த மஹாபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியம் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை முன்னர் வழங்கியிருந்த உறுதிமொழிக்கு அமைய மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாகவும், இதற்கமைய 13.12.2023 முதல் 17.12.2023 வரையில் ஜாஎல மாநகரசபை மைதானத்தில் மஹாபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியம் மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.