அரச மற்றும் மாகாண அரச பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று மதியம் 12 மணி அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்துள்ளது என் அரச மற்றும் மாகாண பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தன சூறியாராய்ச்சி தெரிவித்துள்ளார் .
இருபதாயிரம் ரூபாய் வேதன அதிகரிப்பு, ஜனவரி மாதம் முதல் கொடுப்பனவு வழங்குதல்,2016 முதல் இழந்த ஓய்வூதிய உரிமையை மீட்டெடுத்தல் போன்ற காரணிகளுக்காக முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் தமது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
