புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. அண்மையில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று அதிகாரிகளுடன் இடம்பெற்றிருந்த போதும் அது தொடர்பான இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும்,புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பான நியமன பத்திரத்தை அடுத்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி அனுப்பவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படாத நிலையில்,
குறித்த திகதி தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார்.எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு நான்கு முறைகள் சேவை நீடிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
