அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு செனிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் முன்னோடி திட்டமாக 300,000 மாணவிகளுக்கு செனிட்டரி நாப்கின்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அதனை தொடர்ந்து சுமார் ஒரு மில்லியன் பெண் குழந்தைகளுக்கு செனிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
