வட மாகாண யாழ் தீவக கல்வி பிரிவை சேர்ந்த அதிபர்,ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் குழு ஒன்று இவ்வாரம் பதுளைக்கு வருகை தந்தது.மலையத்தில் சிறந்த பாடசாலைகள் எப்படி இயங்குகின்றன,மலையகத்தின் சமீபத்தில் அசுர கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நடைமுறைகள் என்ன என்பதை கண்டறிவதே இதன் நோக்கம்.
40 பேர் கொண்ட சிறப்பு குழு பசறை கல்வி வலயத்தின் விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தின் கல்வி செயற்பாடுகளை கண்டறிந்தனர்.
இதன்போது விக்னேஸ்வரா அதிபர் திரு.மகேஸ்வரன் தலைமையில் பாடசாலையின் சமீபத்திய கல்வி வளர்ச்சி தொடர்பில் விளக்கமளிப்பதை காணலாம்..
சிவா









