மலையக மக்களின் வாழ்க்கையை மற்றுமொரு தளத்திற்கு எடுத்துச் செல்வதில் இன்றியமையாதது சமூக நல அமைப்புக்களின் பங்களிப்பாகும்.
மலையத்தில் இருந்து கடல் கடந்து தொழில் நிமித்தமாக சென்ற உறவுகள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் மலையக மக்களுக்காக எம் உறவுகள் பல்வேறுபட்ட சமூக அமைப்புக்களை நிறுவி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அவ்வாறு உதவிக்கரம் வழங்கும் 11 சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மலையகத்தின் ஒற்றுமைப் பயணம் எனும் குழாமினை நிறுவி, அதனூடாக பாரிய மக்கள் நல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அவ்வாறானதொரு செயற்திட்டம் இன்றைய தினம் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை, பூப்பனை – எதர்செட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 84 மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வானது,
மலையகம் எமது தாயகம்
புதுமைப் பெண்கள்
மலையக உதயம்
மலையக விழிகள்
மலையக உறவுகள்
விழித்தெழு அறக்கட்டளை
மறக்க முடியாத மலையக சொந்தங்கள்
மத்திய கிழக்கு மகளிர் மன்றம்
ஏழையின் உறவுகள்
மலையகத்தின் அன்பு கரங்கள்
நேர்கொண்ட பார்வை
ஆகிய அமைப்புக்களின் நிதிப்பங்களிப்பில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் நிழற்படங்கள் 👇













