கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் “யாழில் மலையகத்தை உணர்வோம்” எனும் கருப்பொருளிலான பெரு நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கத்தில் இடம்பெறவுள்ளது.
நவம்பர் 30, டிசெம்பர் 1,2,3 ஆகிய தினங்களில் காலை 9.00மணி முதல் 6.00மணிவரை இடம்பெறும் நிகழ்வானது மலையக மக்களின் வாழ்வு, சவால்கள், அடைவுகள் மற்றும் நிலமை என்பவற்றை பிரதிபலிக்கும் நடமாடும் அருங்காட்சியகம், கண்காட்சி, கலை நிகழ்வுகள், ஆவண திரையிடல், அரசியல் – புலமை பகிர்வு மற்றும் ஆற்றுகை நிகழ்வுகளில் மலையகத்தின் 200 வருடகால வரலாற்று பயணத்தை உணர்ந்து கொள்ளவும், மலையக மக்கள் எதிர்பார்க்கும் அடைவுகளை பெற உணர்வு ரீதியாக ஆதரவளிக்கும் வகையில் இடம்பெறவுள்ளது.