புசல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட் பட்ட கித்துல் பெத்த பெரகல பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் விவசாய காணிக்கு போடப்பட்டிருந்த வேளியில் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட டிருந்த நிலையில் அங்கு சென்ற இருவரே மின்சாரம தாக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகளும் ஆவர்
பலியானவர் சூரிய மூர்த்தி சுணில் சாந்தகுமார (29 வயது) காவிந்தியா குமாரி (3 வயது) ஆவர். இச்சம்பவம் நேற்று மாலை 2 மணியளவில் சம்பவித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை புசல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கௌசல்யா.
