நுவரெலியா மாவட்டம் கல்கந்தை வத்தை தமிழ் வித்தியாலயத்தில் இன்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
செய்தி .மோகன்
லயன்ஸ்கிளப் நிறுவனத்தின் அனுசரணையில் நிறுவனத்தின் செயலாளர் சண்முகதாஸன் தலைமையில் அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வின் போது மேலும் கல்கந்தவத்த பகுதியில் அதிபர் சேவைக்கு உள்வாங்கப்பட்ட சுதர்ஷன் மற்றும் மோகனதாஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதோடு இவ்வருடம் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.






