கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 83 சதவீமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி!
90 சதவீதம் பெருந்தோட்ட மாணவர்களை உள்ளடக்கிய கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 2022 (2023) சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து 83 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர்.
ஐந்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெறுபேறுகளை பெற்றுள்ளனர் என்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபர் இரா சிவலிங்கம் தெரிவித்தார்.
