சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நாவலப்பிட்டி உயர் தொழில்நுட்ப நிறுவகம் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
உயர்கல்வி மேம்பாட்டுக்காக செயற்படுத்தப்பட்ட திட்டங்களடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப நிறுவகம் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அவர்களினால் இன்று மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
அதன்படி, நாவலப்பிட்டி உயர் தொழில்நுட்ப நிறுவனம், தீவின் இளைஞர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் மேம்பட்ட தேசிய டிப்ளோமா, தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட தேசிய டிப்ளோமா மற்றும் ஆங்கில மொழியில் மேம்பட்ட தேசிய டிப்ளோமா உட்பட பல படிப்புகளுக்கான வசதிகளுடன் அமைக்கப்படுள்ளது. மேலும் இன் நிறுவகம் 2000 மாணவர்கள் வரை கற்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.







