அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த சித்திகளை பெற்ற கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தங்களது சக ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வினை இன்று பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் தாமாக முன்வந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்நிகழ்வில் அதிபர் திரு.சிவலிங்கம் அவர்களது அழைப்பினை ஏற்று கோட்டம் II இன் பணிப்பாளர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தியதோடு ஆசிரியர்களையும் கௌரவித்தார். இம்முறை எமது பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 170 மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டமை சிறப்பம்சமாகும்.













