பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 6500 மில்லி லீற்றர் சட்டவிரோத கசிப்பு மற்றும் 90,000 மில்லி லீற்றர் கொடாவுடன் நான்கு சந்தேக நபர்களும் இரண்டு நீதிமன்றத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகேவின் பணிப்புரைக்கு அமைய பசறை பொலிஸார் இவ் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
பசறை உடகம பிரதேசத்தில் 1500 மில்லி லிட்டர் கசிப்புடன் இரண்டு சந்தேக நபர்களையும், ஆக்கரத்தன்ன பகுதியில் 4500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 90,000 மில்லி லீற்றர் கொடாவுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சந்தேக நபர்கள் 24, 27, 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரடண தலைமையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
