DM Brothers Group of Company இனால் நாடளாவிய ரீதியில் மாபெரும் சித்திரப்போட்டி நடாத்தப்பட்டது.
இச் சித்திரப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அஜந்தா மண்டபத்தில் கடந்த 09/12/2023 திகதியன்று அன்று நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வுக்கான சிறப்பு அதிதிகளாக நிறுவனத்தலைவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிதிகளாக கெப்ரியல் கல்லூரியின் ஆசிரியை
திருமதி. மல்லிகாதேவி, தலோஸ் த.ம.வி அதிபர்
திரு. பரமேஸ்வரன், மறறும் மலைமகள் த. ம.வி ஆசிரியர் திருமதி. மலர்ச்செல்வி மற்றும் எரைஸ் & சைன் முன்பள்ளி தலைவர் செல்வி.ட்ரினிஷியா மற்றும் ஹட்டன் டான்ஸ் ஸ்டார் குழுவின் தலைவர் திருமதி ராதிகா மற்றும் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் பங்குப்பற்றியிருந்தமை சிறப்புக்குரியதாகும்.









