மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.16.12.2023.
சிவனடிபாத மலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும் தடை இன்றி மின் வழங்க இலங்கை மின்சார சபை முன் வந்து சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான வீதியில் மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இதற்கு ரத்மலான விமான படையின் உலங்கு வானுர்தி மூலம் மின் மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் கடந்த இரண்டு நாட்களாக நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தயாரிப்பு இடத்தில் இருந்து இப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
மின் மாற்றிகள் பொருத்திய பின்னர் சியத்த கங்குல ஓயா பகுதியில் இருந்து சுத்தமான குடிநீர் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருந்து மலை அடிவாரம் வரை உள்ள பகுதிகளில் குடி நீர் வழங்க முடியும் எனவும், மலைக்கு செல்லும் வழியில் யாத்திரியர்களுக்கு குடி நீர் பெற்று கொள்ள சகல வசதிகளும் செய்து கொடுக்கவுள்ளது என தேசிய நீர் வடிகால் திணைக்களம் முன் வந்துள்ளது.




