10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் இன்று (17) பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடமாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 2,142 குடும்பங்களைச் சேர்ந்த 6,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 1,245 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
