கஹட்டருப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலகஹகெதர காட்டு பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு தேடுதல் மேற்கொண்ட போது 9 அடி உயரம் உள்ள 7500 கஞ்சா செடிகளும் 4 கிலோ 468 கிராம் உலர்ந்த கஞ்சாவுடன் 20 வயதுடைய எம்பிலிப்பிட்டய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு அதே பகுதியில் 3000 கஞ்சா செடிகளும் 5.கிலோ 750கிராம் உலர்ந்த கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது
சந்தேக நபரையும் கஞ்சாவும் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்
ராமு தனராஜா
