Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்க ஆலோசனை
மலையகம்

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்க ஆலோசனை

ThanaBy ThanaDecember 22, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக் குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்குள் 8,351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு, அது தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

காணி உரிமை தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகள், அதற்கான விடுவிப்பு பத்திரங்கள், சான்றிதழ்கள் தொடர்பிலான பிரச்சினைகள், பிணையாளர் மற்றும் பரிந்துரைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பணிப்பாளர் ஜெனரல் சிரான் ஹேரத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் என்.பீ.கே,ரணவீர, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் ஜே.எம்.பத்ரானி ஜயவர்தன, கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன, காணி பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசிங்க, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரியந்தா திசாநாயக்க உள்ளிட்டவர்களும் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.